மேலும் செய்திகள்
வணிக வளாகத்தில் கடை விண்ணப்பம் வரவேற்பு
06-Nov-2024
திருவள்ளூர்:அவ்வையார் விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சர்வதேச மகளிர் தின விழாவில், பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவையாற்றியோர், https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-Nov-2024