உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ள அரசூர் ஈஸ்வரர் கோவில் குளம்

ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ள அரசூர் ஈஸ்வரர் கோவில் குளம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, அரசூர் கிராமத்தில், சவுந்தர்யவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் பின்புறம் உள்ள குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குளம் முழுதும் ஆகாயத்தாமரை மற்றும் முள்செடிகள் சூழ்ந்து கிடக்கின்றன.மழைக்காலத்தில் இந்த குளத்தில் தேங்கும் மழைநீர், கிராமவாசிகளின் பல்வேறு தேவைக்கு பயன்படுகிறது. நிலத்தடிநீர் பாதுகாப்பிற்கும் உதவியாய் அமைந்து உள்ளது. தற்போது குளத்தில் தண்ணீர் இருந்தும், ஆகாயத்தாமரை சூழ்ந்து கிடப்பதால், கிராமவாசிகள் அதை பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.குளம் பராமரிப்பு இன்றி, பாழடைந்து இருப்பதை கண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.கோவில் குளத்தை பாழாக்கி வரும் ஆகாயத்தாமரை மற்றும் முள்செடிகளை அகற்றி, தேவையான இடங்களில் படித்துறைகள் அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ