உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை வஸ்து கிடைக்காத ஆத்திரம் மளிகை கடைக்கு தீ வைத்தவர் கைது

போதை வஸ்து கிடைக்காத ஆத்திரம் மளிகை கடைக்கு தீ வைத்தவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 35. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் ஜிராக்ஸ் மற்றும் பிரிண்ட் எடுத்து தரும் பணியும் மேற்கொண்டு வருகிறார். கடந்த, 2ம் தேதி மாலை, அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன், 22, என்பவர் கடைக்கு வந்து, குட்கா புகையிலை பொருட்களை கேட்டார். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட அவற்றை விற்பனை செய்வதில்லை என சீனிவாசன் தெரிவித்தார். மேலும் கடையில் ஏற்கனவே உள்ள கடன் பாக்கியையும் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், 'கடையை தீ வைத்து எரித்து கொளுத்திவிடுவேன்' எனக்கூறி மிரட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், நள்ளிரவு, சீனிவாசனின் கடை தீப்பற்றி எரிவதாக வந்த தகவலை அங்கு விரைந்தார். கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினரும் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த, 1.10 லட்சம் ரூபாய், ஜிராக்ஸ் இயந்திரம், பிரிண்டர், பிரிட்ஜ், டி.வி., இன்வெர்ட்டர், மளிகை பொருட்கள் என கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்தும் தீயில் கருகி நாசமாயின.குட்கா புகையிலை பொருட்கள் கேட்டு, இல்லை என்று கூறிதால் மிரட்டல் விடுத்து சென்ற தீனதயாளன், 22, கடைக்கு தீவைத்து எரித்ததாக சீனிவாசன் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் பூவலம்பேடு கிராமவாசிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தீனதாயளனை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து நேற்று கடை எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீனதயாளனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ