திருத்தணி கோவில் ஊழியர் மீது தாக்குதல்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று முன்தினம் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம்,50, அவரது மகன் அபிஷேக், 19 வந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு வழியில் செல்ல முயன்ற போது, அங்கு, பணியில் இருந்த கோவில் ஊழியர் ரமேஷ் இருவரையும் தடுத்து நிறுத்தினார்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கோவில் ஊழியர் ரமேஷை தாக்கியுள்ளனர்.இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் சொக்கலிங்கம், அபிஷேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.