உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீரராகவர் கோவிலில் இன்று காணிக்கை வஸ்திரம் ஏலம்

வீரராகவர் கோவிலில் இன்று காணிக்கை வஸ்திரம் ஏலம்

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று, காணிக்கை வஸ்திரங்கள் ஏலம் நடைபெறும். அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மற்றும் தாயாருக்கு, பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரங்கள் வழங்கி வருவது வழக்கம். இவ்வாறு காணிக்கையாக பெறப்பட்ட வேஷ்டி, புடவை உள்ளிட்ட வஸ்திரங்கள், இன்று கோவில் உட்பிரகாரத்தில், பொது ஏலம் விடப்பட உள்ளது. காலை 10:30 - 12:30 மணி வரை மற்றும் மாலை 4:30 - 6:00 மணி வரை ஏலம் நடைபெறும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ