உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆட்டோ ஓட்டுனருக்கு வெட்டு இருவருக்கு வலை

ஆட்டோ ஓட்டுனருக்கு வெட்டு இருவருக்கு வலை

திருத்தணிஅண்ணன் மகளை கிண்டல் செய்த, 2 இளைஞர்களை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுனரை அரிவாளால் வெட்டினர்.திருத்தணி பைபாஸ் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ், 34; ஆட்டோ ஓட்டுனர். இவரின் அண்ணன் மகளை மேல்திருத்தணி பகுதியைச் சேர்ந்த குரு, 20, தருண், 21, ஆகியோர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.நேற்று காலை மகேஷ், மேல்திருத்தணிக்கு சென்று, இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்குள்ளவர்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மாலை மகேஷ் ஆட்டோவை மேல்திருத்தணி வழியாக ஓட்டி வந்தார். அப்போது, குரு, தருண் ஆகியோர் ஆட்டோவை நிறுத்தி, அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி