உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு

ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு

திருத்தணி:திருத்தணியில் எச்.ஐ.வி., நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்காக நடந்த இந்த பயிற்சி கூட்டத்தை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இந்திய சமுதாய நல நிறுவனம் இணைந்து நடத்தியது.திருத்தணி பி.டி.ஓ., சந்தானம் தலைமை வகித்தார். இதில், எச்.ஐ.வி., மற்றும் பால்வினை நோய், காசநோய் குறித்து விளக்கப்பட்டது.மேலும், சமூகத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரை புறக்கணிக்க கூடாது. சமூகத்தில் அவர்களுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டும். அரசு நல திட்டங்கள் வழங்குவதில், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை தந்து உதவ வேண்டும் எனக் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி