உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போஸ்டர் ஒட்டுவதை தடுக்க சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு

போஸ்டர் ஒட்டுவதை தடுக்க சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, மகப்பேறு, குழந்தைகள் நலம், இதய நோய், எலும்பு முறிவு சிகிச்சை, கண், பல், அவசர சிகிச்சை என, பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.ஆண், பெண் நோயாளிகளுக்காக, உள்நோயாளிகள் பிரிவு, 500 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும், 3,000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்த மருத்துவமனை, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், போக்குவரத்து அதிகம் உள்ள ஜே.என்.சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், மருத்துவமனை சுற்றுச்சுவரில், பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போஸ்டர் ஒட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் முற்றிலும் அசுத்தமாக காட்சியளிக்கிறது.இதை தவிர்க்கும் வகையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை சுற்றுச்சுவரில், சுகாதார விழிப்புணர்வு வாசகம் அடங்கிய விளம்பரத்தை வரைந்து வருகிறது. எனவே, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இனியாவது, அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்குமாறு, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ