மதுக்கூடமான ஊராட்சி அலுவலகம்
உளுந்தை, :கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி அலுவலகம், கடந்த 2022ல் ஏற்பட்ட மழையில் சேதமடைந்தது. இதையடுத்து, ஊராட்சி அலுவலகம், கிராம இ - சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது.இதையடுத்து, தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ், 20.75 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, கடந்த 2022ம் ஆண்டு பணிகள் துவங்கியது. பணிகள் நிறைவடைந்து ஓராண்டாகியும், திறப்பு விழா நடத்தாமல் பயன்பாட்டிற்கு வராததால், 'குடி'மகன்கள் மதுக்கூடமாக மாற்றி விட்டனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உளுந்தை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.