உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு மருத்துவமனையில் அபாய நிலையில் மின்கலப்பெட்டி நோயாளிகள், பகுதிவாசிகளுக்கு காத்திருக்கும் அபாயம்

அரசு மருத்துவமனையில் அபாய நிலையில் மின்கலப்பெட்டி நோயாளிகள், பகுதிவாசிகளுக்கு காத்திருக்கும் அபாயம்

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சுற்றியுள்ள பகுதிளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு வந்து செல்கி்னறனர். மேலும் அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகி்னறனர். மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடம் எதிரே நோயாளி உறவினர்கள் தங்கும் இடம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின்கலப்பெட்டி திறந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் மின்கலப்பெட்டி மழைநீரில் மூழ்கும் அபாய நிலையில் இருந்தது. மின்கலப்பெட்டியை சீரமைக்க மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை ஆய்வு செய்து அபாய நிலையில் உள்ள மின்கலப்பெட்டியை சீரமைக்க வேண்டுமென நோயாளிகள் மற்றும் பகுதிவாசிள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை