உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் வளாகத்தில் பைக் திருட்டு

கோவில் வளாகத்தில் பைக் திருட்டு

ஆர்.கே.பேட்டை:முருகன் கோவில் முன் நிறுத்தி விட்டு, சுவாமி தரிசனம் செய்ய சென்றவரின் பைக் திருடு போனது. ஆர்.கே.பேட்டையில் இருந்து புதுார்மேடு செல்லும் வழியில் உள்ள கோபாலபுரம் பகுதியில், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பெரியநாகபூண்டியைச் சேர்ந்த வெங்கடேசன், 38, என்பவர் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கோவில் நுழைவாயில் அருகே, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பைக் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை