இரு பெண்கள் மாயம்
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகள் திபிகா, 21. முருக்கஞ்சேரி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 14ம் தேதி வேலைககு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல, புல்லரம்பாக்கம் அடுத்த, புன்னம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகள் சினேகா, 20. பிளஸ் 2 படித்து விட்டு, போளிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்தவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.