உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் புத்தக திருவிழா லோகோ வெளியீடு

திருவள்ளூரில் புத்தக திருவிழா லோகோ வெளியீடு

திருவள்ளூர்:திருவள்ளூர் சி.வி. நாயுடு சாலையில் அமைந்துள்ள மைதானத்தில், 4-வது புத்தகத் திருவிழாவிற்கான, 'லோகோ' புத்தகத்தினை வெளியிடுதல் மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த விழாவில், திருவள்ளுர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில், எஸ்.பி., சீனிவாச பெருமாள், எம்.எல்.ஏ.,க்கள் - திருவள்ளூர் ராஜேந்திரன், திருத்தணி சந்திரன், கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், 4-வது புத்தகத் திருவிழாவிற்கான, 'லோகோ' புத்தகத்தினை வெளியிட்டு புத்தகத் திருவிழாவிற்கான அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.திருவள்ளூர் மாவட்டத்தின் நிர்வாகத்தின் சார்பில், 4-வது புத்தகத் திருவிழா, வரும் 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது என, கலெக்டர் தெரிவித்தார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார். உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி