உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் குமரேசன், 16; பிளஸ் 1 மாணவர். இவர், அருகிலுள்ள எஸ்.கே.வி.ஆர்.பேட்டை ஏரிக்கு நேற்று குளிக்க சென்றார். அந்த ஏரியில் இருந்து, நகரி - - திண்டிவனம் ரயில் பாதைக்காக மண் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஏற்பட்ட குட்டையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை அறியாத சிறுவன், ஆழமான அந்த குட்டையில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் குமரேசனை மீட்டு, பொதட்டூர்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ