மேலும் செய்திகள்
பஸ் ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய நால்வருக்கு வலை
30-Sep-2024
திருத்தணி: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி வழியாக திருப்பதி நோக்கி நேற்று முன்தினம், இரவு, 9:30 மணிக்கு, தடம் எண்:212எச் என்ற அரசு பேருந்து புறப்பட்டது.பேருந்தில் ஓட்டுனர் அன்பு, 42; நடத்துனர் அன்பரசு, 42, என்பவர் பணிபுரிந்துக் கொண்டிருந்தனர்.அந்த பேருந்தில் திருத்தணி நகரைச் சேர்ந்த நான்கு பேர் பயணம் செய்தனர். அப்போது டிக்கெட் வாங்குவதில் நடத்துனருக்கும், நான்கு பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் தாக்கப்பட்டனர்.இருவரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியதில், திருத்தணி செட்டி தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெகன் என்கிற லோகேஷ், 25, மதன், 25 மற்றும் அனுமந்தாபுரம் மோகன், 26, என, தெரிய வந்தது.அதை தொடர்ந்து போலீசார் நேற்று, லோகேஷ், மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோகனை தேடி வருகின்றனர்.
30-Sep-2024