உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மாணவியரை காப்பாற்றி உயிர்விட்ட பஸ் டிரைவர்

 மாணவியரை காப்பாற்றி உயிர்விட்ட பஸ் டிரைவர்

சோளிங்கர்: ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்த டிரைவர், சமயோசிதமாக பஸ்சை நிறுத்தி உயிரிழந்தார். இதனால் மாணவியர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லுாரிக்கு செல்வதற்காக, கல்லுாரி பேருந்தில் நேற்று காலை, மாணவியர் பயணம் செய்தனர். ஆற்காடு அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த ரவி, 60, பஸ்சை ஓட்டினார். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் அருகே -வாலாஜா சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே, சாலை ஓர பள்ளத்தில் இறக்கி பஸ்சை நிறுத்திய டிரைவர் ரவி, சம்பவ இடத்திலேயே இறந்தார். சமயோசிதமாக செயல்பட்டதால், பஸ்சில் பயணித்த 12 மாணவியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி