உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருப்பதிக்கு பேருந்து இயக்கம் கும்மிடியில் பயணியர் குழப்பம்

திருப்பதிக்கு பேருந்து இயக்கம் கும்மிடியில் பயணியர் குழப்பம்

கும்மிடிப்பூண்டி:சென்னை மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, திருப்பதி வரை செல்லும் தடம் எண்: 200 என்ற தமிழக அரசு பேருந்து, கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி நகருக்குள், திருப்பதி செல்லும் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, கும்மிடிப்பூண்டி நகருக்குள் வந்து செல்லும் விதமாக, நேற்று திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை (தடம் எண்: 200) இயக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், நேற்று துவக்க விழா நடந்தது.கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் தலைமையில் நடந்த விழாவில், தமிழக அரசு போக்குவரத்து கழக திருவள்ளூர் மாவட்ட துணை மேலாளர் மோகன், பொன்னேரி பணிமனை கிளை மேலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.பேருந்து சேவை துவக்கி வைக்கும் முன், அந்த புதிய பேருந்து நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தது. பேருந்தின் முன் பக்கத்தில், தடம் எண்: 200, திருப்பதி என எல்.இ.டி., விளக்குகளால் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.அதே பேருந்தின் பின் பக்கத்தில், மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆரணி வரை இயக்கப்படும் தடம் எண்: 115 பி, என குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பதி செல்கிறதா, ஆரணி செல்கிறதா என பயணியர் ஒவ்வொருவரும் விசாரித்தனர்.திருப்பதி பேருந்து தான், பின்னால் தவறாக குறிப்பிட்டப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், புதிய பேருந்து துவக்க விழாவின் போது, பயணியர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை