உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து, ஆந்திர மாநிலம், சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது விடியங்காடு பேருந்து நிறுத்தம். இந்த பகுதியில் இருந்து, விடியங்காடு கிராமத்திற்கு இணைப்பு சாலை உள்ளது.விடியங்காடு கிராமத்தில் வசிப்பவர்கள், இந்த கூட்டு சாலையில் இருந்து, சித்துார், வேலுார், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, விடியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு படித்து வரும் மாணவர்களும் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் பயணிக்கின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த பகுதியில், இதுவரை பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. மரத்தடியில் காத்திருந்து பகுதிவாசிகள் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், வெயிலில், மழையில் அவதிபடுகின்றனர்.இந்த பகுதியில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிழற்குடை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை