உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 236 சத்துணவு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

236 சத்துணவு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.சமையல் உதவியாளராக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும் ஓராண்டுக்கு பின், சிறப்பு கால முறை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 21-40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட துாரம் 3 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கவும். மேலும் www.tiruvallur.nic.inஎன்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 29ம் தேதிக்குள் அனைத்து சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். நேர்முக தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை