மேலும் செய்திகள்
பொதுத்துறை வங்கிகளில் குறைந்து வரும் ஊழியர்கள்
11-Aug-2025
திருவள்ளூர்:தமிழக அரசின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுலாத்துறையால், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, சுற்றுலா தொழில்முனைவோருக்கு, சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டும், சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்களுக்கு, 17 வகை பிரிவுகளின் கீழ், 48 விருதுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுலா விருது பெற, தகுதிவாய்ந்தோர், www.tntourismawards.com என்ற இணையதளத்தில் வரும் 15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11-Aug-2025