பெண் குழந்தைகள் திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு
திருவள்ளூர்:முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், முதிர்வு தொகை பெற சமூக நலத்துறையினரை தொடர்பு கொள்ளலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், 'முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்' விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பீடு பத்திரம் பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத பயனாளிகளின் விபரங்கள், tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பயனாளிகள், தங்களது வைப்பு நிதி பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களை நேரில் அணுக வேண்டும்.மேலும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044- - 2989 6049 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.