மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
10-Jul-2025
திருவள்ளூர்:மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்தி க்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவில், 2025 -- 26ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, ஆக., 22 முதல் செப்., 12 வரை நடைபெற உள்ளது. மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் 53, மண்டல அளவில் 14 என, மொத்தம் 67 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு, முறையே 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, முறையே, 1 லட்சம், 75,000 மற்றும் 50,000 ரூபாய் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ் வாயிலாக, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகை பெறலாம். பங்கேற்க விரும்புவோர், https://cmtrophy.sdat.in என்ற இணையதளத்தில், உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரில் அல்லது 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Jul-2025