சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் மீது வழக்கு
திருவள்ளூர்:பூண்டி ஒன்றியத்துக்குட்பட்டது சிறுவானுார் ஊராட்சியை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இதற்கு எதிர்ப்பு அப்பகுதியைச் சேர்ந்த 35 பெண்கள் நேற்று முன்தினம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் கொசவன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக் காப்பக டி.எஸ்.பி., ஸ்ரீதர் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் அந்தோணிஸ்டாலின் மற்றும் தாலுகா போலீசார் சமாதான பேச்சு நடத்தியடுத்து மறியல் கைவிடப்பட்து.இதையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார், 35 பெண்கள் மீது போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.