உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை மீடியனில் கால்நடைகள் ரெஸ்ட்

சாலை மீடியனில் கால்நடைகள் ரெஸ்ட்

திருமழிசை:திருமழிசை -- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள், மீடியன் பகுதியில் ஓய்வெடுக்கின்றன.இவ்வாறு ஓய்வெடுக்கும் கால்நடைகள், சில நேரங்களில் சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., உள்ளிட்டோர் நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வருவதை தடுக்க உத்தரவிட்டும், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவது, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வருவதை தடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ