உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செயின் பறித்தவர் கூட்டாளியுடன் சிக்கினார்

செயின் பறித்தவர் கூட்டாளியுடன் சிக்கினார்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி, 37. கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 23ம் தேதி, கணவர் கண்ணனுடன், டூ- - வீலரில் சென்று கொண்டிருந்தார்.பின்னால், 'பல்சர்' பைக்கில் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், மீனாட்சி அணிந்திருந்த, 14 சவரன் தாலி சரடை பறித்து சென்றார். கீழே விழுந்த மீனாட்சி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட, கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்புகுளம் அருகே, செங்கல்சூளைமேடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், 35, என்பவரை நேற்று கைது செய்தனர். செயினை விற்க உதவிய, அவரது கூட்டாளியான கவரைப்பேட்டை அடுத்த, பூவலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், 36, என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம், பத்தரை சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.முதல் கட்ட விசாரணையில், 20க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்களில், நாகராஜ் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி போலீசார், இருவரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ