உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாராயணவனத்தில் தேர் திருவிழா

நாராயணவனத்தில் தேர் திருவிழா

ஆந்திர மாநிலம், புத்துார் அடுத்த நாராயணவனம் கிராமத்தில் அமைந்துள்ளது கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில். திருப்பதி வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்த தலம் என்பதால், மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக புத்துார் செல்லும் மார்க்கத்தில் நாராயணவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ரயிலில் வருபவர்கள், புத்துார் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மற்றும் பேருந்தில் பயணித்து இந்த கோவிலுக்கு வர முடியும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவிலின் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலின் பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினசரி சிம்மம், அனுமன், கருடன் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா எழுந்தருளி வருகிறார். இதில் நேற்று பிரசித்தி பெற்ற தேர் திருவிழா நடந்தது. காலை 8:00 மணிக்கு தேரில் எழுந்தருளிய பெருமாள், மாடவீதிகளில் வலம் வந்தார். திரளான பக்தர்கள், ‛கோவிந்தா' கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5:00 மணிக்கு தேர் மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை