உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து முதல்வர் அலுவலகம் கைவிரிப்பு

கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து முதல்வர் அலுவலகம் கைவிரிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூரில் இருந்து, வேப்பம்பட்டு வழியாக கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து சேவை கேட்டு அனுப்பிய மனுவிற்கு முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் கைவிரித்துள்ளது.தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லாமல், பல பேருந்துகளில் மாறி செல்ல வேண்டி உள்ளது.இதுகுறித்து காக்களூரைச் சேர்ந்த ராகவேந்திர பட் என்பவர், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி இருந்தார்.மனு விபரம்:திருவள்ளூரில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்ல இதுவரை, கோயம்பேடு சென்று வந்தனர். பேருந்து வசதியும் போதுமானதாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது, கிளாம்பாக்கத்திற்கு வெளியூர் பேருந்துகள் மாற்றப்பட்டு உள்ளன.இதனால், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தோர், கிளாம்பாக்கத்திற்கு செல்ல ஆவடி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு சென்று, பின் மாற்று பேருந்தில் பயணிக்க வேண்டி உள்ளது.இதனால், பயணியர் கடும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க, திருவள்ளூரில் இருந்து, காக்களூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், நெமிலிச்சேரி வழியாக வெளிவட்ட சாலையில் கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இம்மனுவிற்கு முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் அளித்துள்ள பதில் மனு:திருவள்ளூர், ஆவடி, அம்பத்துார் பேருந்து நிலையங்களில் இருந்து, கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. இந்த வழித்தட பேருந்துகளை பயன்படுத்தி, ஆவடி- - தாம்பரம், ஆவடி - பட்டாபிராம் - கிளாம்பாக்கம் ஆகிய பேருந்துகள் வழியாக பயணிக்கலாம். பயணியர் இந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி