உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உடல் நலக்குறைவால் சினிமா நடிகர் மறைவு

உடல் நலக்குறைவால் சினிமா நடிகர் மறைவு

சென்னை,சினிமா சண்டை பயிற்சியாளரும், நடிகருமான கோதண்டராமன், 69, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். தமிழ் சினிமாவில் சண்டை கலைஞராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் பணிபுரிந்துள்ளார்.'எல்லாமே என் பொண்டாட்டி தான், எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ்மோர்' உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார். 'பகவதி, கிரீடம், தெறி' உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவும் செய்தார்.குறிப்பாக சுந்தர்.சி இயக்கிய, கலகலப்பு படம், இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. இதையடுத்து, காமெடி பாத்திரத்திலும் நடித்து வந்தார்.பெரம்பூரில் வசித்து வந்த அவர், இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு, சினிமாவை சேர்ந்த ஸ்டன்ட் கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று, இவரின் வீட்டில் இறுதிச்சடங்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை