உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூனிமாங்காடு அரசு பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

பூனிமாங்காடு அரசு பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

திருத்தணி:அரசு பள்ளி மாணவர்கள் வசதிக்காக, புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை மற்றும் ஒரு நுாலக கட்டடங்களை, நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். திருத்தணி தாலுகா, பூனிமாங்காட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, போதிய வகுப்பறை மற்றும் நுாலக கட்டடம் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, திருத்தணி பொதுப்பணித் துறையினர், நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், 1.12 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகள் மற்றும் ஒரு நுாலகம் கட்டும் பணி, நான்கு மாதங்களுக்கு முன் து வக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, காணொலி மூலம் திறந்து வைத்தார். பின், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் குத்து விளக்கேற்றி, புதிய கட்டடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ