உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

 கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

சோழவரம்: சோழவரம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை துரிதமாக மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார். சோழவரம் ஒன்றியம் வடக்குநல்லுார் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 45 லட்சம் ரூபாயில் துணை சுகாதார நிலையம், பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ், 3.41 கோடியில், 67 குடியிருப்புகள், ஒரக்காடு ஊராட்சியில், 2.90 கோடி ரூபாயில், 57 குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று, கலெக்டர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டு, தற்போதைய பணிகளின் நிலவரம், முடிவடையும் காலம், கட்டுமானங்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கட்டுமான பணிகளை தரமாகவும், துரிதமாகவும் முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை