உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இலவச பட்டா வழங்கும் பணிகள் திருத்தணியில் கலெக்டர் விசாரணை

இலவச பட்டா வழங்கும் பணிகள் திருத்தணியில் கலெக்டர் விசாரணை

திருத்தணி, ஏதிருத்தணி நகராட்சியில் மலைப்பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், 1,000க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்காததால், அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியவில்லை.இந்நிலையில், ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்தார்.அந்த வகையில், திருத்தணியில் மலை புறம்போக்கு, பாறை புறம்போக்கு, அனாதீனம் ஆகிய இடங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி வசிப்பவர்களின் விபரங்கள் குறித்து வருவாய் துறையினர் சேகரித்து வருகின்றனர். இதில், தகுதியானவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல்வர் ஸ்டாலின், கும்மிடிப்பூண்டியில் நடக்கும் அரசு விழாவில் இலவச பட்டா வழங்கவுள்ளார். இந்நிலையில், திருத்தணி இந்திரா நகர், அக்கையநாயுடு தெரு, நேருநகர் ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவுள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு செய்து, ஆவணங்கள் சரிபார்த்தார்.ஆய்வின்போது, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மலர்விழி, வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் உட்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். திருத்தணி நகராட்சியில் மட்டும், 1,300 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாசில்தாருக்கு 'டோஸ்'

திருத்தணியில் இலவச பட்டாக்கள் பெறும் பயனாளிகளிடம், கலெக்டர் பிரதாப் விசாரணை நடத்தினார். அப்போது தாசில்தார், பயனாளிகளிடம் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிவிக்காமல் நிலத்தின் பிரிவு, வரைபடம் இல்லாததால் கோபமடைந்த கலெக்டர், தாசில்தார் மலர்விழியிடம், இப்படி மெத்தனமாக வேலை செய்தால், வரும் 19ம் தேதி முதல்வர் எப்படி பட்டா வழங்குவார் என, கடிந்து கொண்டார். 'ஓரிரு நாளில் பயனாளிகளின் முழு விபரம் சமர்ப்பிக்க வேண்டும்' என எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை