மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
10-Jan-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கொடி நாள் நிதி அதிகமாக வசூலித்தவர்களுக்கு கலெக்டர் கேடயம் வழங்கினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பில், கொடி நாள் நிதியினை அதிகமாக வசூல் செய்த அலுவலர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் கேடயம் வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை கொடிநாள் வசூல் புரிவதில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்து வருகிறது. 2023ம் ஆண்டிற்கான இலக்கான 5.50 கோடியை விட, 6.06 கோடி ரூபாய் வசூல் புரிந்து, திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கொடி நாள் வசூல் செய்கின்ற தொகை முழுதும் முன்னாள் படை வீரர் நலனுக்காக செலவிடப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், முன்னாள் படை வீரர் நல அலுவலர் வெங்கடேஷ் குமார் , மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் - -திருவள்ளூர், தீபா - திருத்தணி ஆகியோர் பங்கேற்றனர்.
10-Jan-2025