உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி ஏறி கல்லுாரி மாணவன் பலி

சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி ஏறி கல்லுாரி மாணவன் பலி

பள்ளிக்கரணை:மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜித்தேஷ், 21. இவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று காலை 6:00 மணிக்கு, நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக, 'யமகா பேஷர்' இருசக்கர வாகனத்தில், வேளச்சேரி - -தாம்பரம் பிரதான சாலையில் மேடவாக்கம் நோக்கி சென்றார். பள்ளிக்கரணை, ஐ.ஐ.டி., காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, நாராயணபுரம் பகுதியில் சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி, எதிர்பாராதவிதமாக அவர் மீது ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜித்தேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி ஓட்டுநர், லாரியை சம்பவ இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பினார். பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஜித்தேஷ் உடலை, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை