உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கல்லூரி மாணவன் விபத்தில் படுகாயம்

கல்லூரி மாணவன் விபத்தில் படுகாயம்

திருத்தணி, திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன் மகன் புருஷோத்தமன், 18. இவர், திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று காலை 'ஜூப்பிட்டர்' இருசக்கர வாகனத்தில் கல்லுாரிக்கு சென்றார்.மாலை கல்லுாரி முடிந்ததும், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, நிலைதடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்தார்.இதில், படுகாயமடைந்த மாணவனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி