கல்லுாரி மாணவி மாயம்
கடம்பத்துார்:கடம்பத்துாரில் கல்லுாரி மாணவி மாயமானார்.கடம்பத்துார் அடுத்த கோவிலாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகள் சுரேஷ்கா, 19. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பாரதி கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இவரது தந்தை வேலு கடம்பத்துார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.