உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலி மாற்றுத்திறனாளி சான்று மூன்று பேர் மீது புகார்

போலி மாற்றுத்திறனாளி சான்று மூன்று பேர் மீது புகார்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் போலியான மாற்றுத்திறனாளிகள் சான்று பெற்று, மருத்துவரின் போலியான கையொப்பத்துடன் சிலர் சான்றிதழ்களை பயன்படுத்தி வருவதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், நேற்று முன்தினம் இரவு ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.இதில், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சாலையைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி பத்மாவதி, அம்மையார்குப்பம் சிறுதொண்டர் தெருவைச் சேர்ந்த குமார், வங்கனுார் ஜெகன்நாதன் ஆகியோர் போலியான சான்றிதழ்களை பயன்படுத்தியது தெரியவந்தது.இதுகுறித்து சீனிவாசன், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ