உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்மாற்றியில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

மின்மாற்றியில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

திருவாலங்காடு ஊராட்சியில், திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை, அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியில், கொடிகள் படர்ந்து வருகின்றன. மாதாந்திர பராமரிப்பு பணியின் போதும், அவை அகற்றப்படுவதில்லை. மின் ஒயர்களின் மீது செடி, கொடிகள் படர்வதால், மழையின்போது மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின் கம்பத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி மற்றும் படர்ந்து வரும் கொடிகளை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜேந்திரன், திருவாலங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !