| ADDED : டிச 07, 2025 06:19 AM
திருவள்ளூர்: அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த வாயலுாரில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மழை காரணமாக, கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, பள்ளியில் இருந்த 2 கம்ப்யூட்டர் மற்றும் 9 பேட்டரி ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.