புகார் பெட்டி சாலையில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், ஊத்துக்கோட்டை பஜார் பகுதி வழியே செல்கின்றன. ஏற்கனவே வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்.-என்.ராஜேந்திரபிரசாத்,ஊத்துக்கோட்டை.