உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் விரைவு ரயில் நிறுத்தம் அமைச்சரிடம் காங்., - எம்.பி., மனு

திருவள்ளூரில் விரைவு ரயில் நிறுத்தம் அமைச்சரிடம் காங்., - எம்.பி., மனு

திருவள்ளூர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில், விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வேண்டுமென, ரயில்வே இணை அமைச்சர் சோமன்னாவிடம், காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் கோரிக்கை விடுத்துஉள்ளார்.இதுகுறித்து, சசிகாந்த் செந்தில் கூறியதாவது:திருவள்ளூரை பொறுத்தவரை முக்கியமான நீர் நிலைகள், தொழில் நிறுவனங்கள், சென்னைபுறவழிச் சாலை,மப்பேடு லாஜிஸ்டிக்ஸ் பூங்கா போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இவை, உள்ளூர் மக்கள் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். எனவே, புதிய ரயில் சேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.மேலும், பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில், விரைவு ரயில்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைப்பதற்கு பதிலாக, திருவள்ளூரில் அமைத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவும், நெரிசலை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த கோரிக்கைகளை, ரயில்வே இணை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை