வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொகுதி வாரியாக உதவி மையம் திறப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தம் பணிக்காக, தொகுதி வாரியாக தேர்தல் உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், 35.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக, 3,699 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர், 391 மேற்பார்வையாளர், 33 உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் 10 வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர், 40 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பின், அவர் 2002 - 2005 வாக்காளர் பட்டியலில் இருந்தால், அதன் விபரத்தை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விபரத்தை பூர்த்தி செய்ய, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் உதவி செய்வார். மேலும், www.elections.tn.gov.inஎன்ற இணைய தளத்திலும் விபரத்தை பெறலாம். மேலும், 40 வயதிற்கு உட்பட்டவர் எனில், வாக்காளரின் தந்தை, தாய் அப்பட்டியலில் இருந்தால், அவர்களது விபரத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, https://voters.eci.gov.inஎன்ற இணைய தளத்தில் வாக்காளர்களே பதிவேற்றம் செய்யலாம். வாக்காளர் பட்டியல் பூர்த்தி செய்வது தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை சரிசெய்ய, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் உதவி மையத்தில் உள்ள 73051 58550 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய உதவி மைய எண் விபரம் தொகுதி மொபைல் எண் கும்மிடிப்பூண்டி 7200133851 பொன்னேரி 9150799790 திருத்தணி 8610645913 திருவள்ளூர் 9445900494 பூந்தமல்லி 9789254821 ஆவடி 8925902432 மதுரவாயல் 9445190091 அம்பத்துார் 9445190207 மாதவரம் 9003595898 திருவொற்றியூர் 9445190201