உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வங்கனுார் விநாயகர் கோவில் கட்டும் பணி நாளை துவக்கம்

வங்கனுார் விநாயகர் கோவில் கட்டும் பணி நாளை துவக்கம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது, வியாசேஸ்வரர் மலைக்கோவில்.இந்த கோவிலில், நித்திய வழிபாடுகளுடன் பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன. காணும் பொங்கல் திருவிழாவின் போது, கிரிவலம் நிகழ்ச்சியும் நடக்கிறது.இந்த மலைக்கோவில் படிவழி பாதையில், மரங்கள் அடர்ந்து இயற்கையான சூழல் நிலவுகிறது. மலையடிவாரத்தில், படிவழியின் துவக்கத்தில், சக்தி விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.இந்த சுவாமிக்கு புதிய கோவில் கட்ட வேண்டும் என்ற பக்தர்களின் வேண்டுதலின் பேரில், தற்போது கோவில் கட்டும் பணி துவங்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை 2ம் தேதி காலை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ