மேலும் செய்திகள்
கலைத்திருவிழா போட்டி
13-Nov-2024
திருவள்ளூர்:காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 10 மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களும், பள்ளிக்கு தினமும் வருவதை உறுதி செய்ய வேண்டும். தினமும் மாணவர்களுக்கு சிறு தேர்வு மற்றும் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, மாணவர்களுக்கு புரியும் விதமாக நடத்தி, வகுப்பின் இறுதியில் பாடத்தின் சுருக்கத்தை கூற வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தினமும் வீட்டு தேர்வு அளிக்க வேண்டும். 'நீட்' நுழைவு தேர்வுக்கு அதிக மாணவருக்கு பயிற்சி அளித்து, தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு, முதன்மை கல்வி அலுவலர் நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-Nov-2024