மூன்றரை வயது குழந்தை பலாத்கார வழக்கு சமையல் மாஸ்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
திருவள்ளூர்:மூன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கேட்டரிங் மாஸ்டருக்கு, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், 12 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 35,000 ரூபாய் அபராதம் வி தித்து தீர்ப்பளித்தது. கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தில், திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன், 31, என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g6r2jp8u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கேட்டரிங் நிறுவனம் அ ருகே விளையாடிக் கொ ண்டிருந்த மூன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, குழந்தையின் தந்தை அளித்த புகாரின்படி, திருவள்ளூர் மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். திருவள்ளூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது வந்தது. நீதிபதி உமா மகேஸ்வரி வழங்கிய தீர்ப்பில், 'மூன்றரை வயது குழந்தையை கடத்திய குற்றத்திற்காக, ஏழு ஆண்டு மற்றும் 10,000 ரூபாய் அபராதமும், பாலியல் பலாத் காரம் செய்ததற்காக, ஐந்து ஆண்டு மற்றும் 25,000 ரூபாய் அபராதம் என, மொத்தம் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 35,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், குழந்தையின் பெற்றோருக்கு, தமிழக அரசு இழப்பீட்டு தொகையாக, 3.50 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்தார். பின், புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.