மேலும் செய்திகள்
தரை தளத்திற்கு உயர்ந்த கிணறுகளின் நீர்மட்டம்
29-Dec-2024
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், புளியங்குண்டா பகுதியில் இரண்டு விவசாய கிணறுகளில், கடந்த மாதம் காப்பர் ஓயர்கள் திருடு போனதாக விவசாயிகள் புகார் அளித்தனர்.அதன்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து திருடனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, திருவாலங்காடு ரயில் நிலைய சாலை சின்னம்மாபேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்தவரை திருவாலங்காடு போலீசார் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, பனப்பாக்கம் அடுத்த, மேல்விளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 30, என்பதும். இவர் திருவாலங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இரவு நேரங்களில் சென்று மோட்டாருக்கு செல்லும் காப்பர் ஓயர்களை திருடி விற்று வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அவரிடம் இருந்து, 7 கிலோ காப்பர் ஓயர்களை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Dec-2024