உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவொற்றியூரில் அமைகிறது மாநகராட்சி மாட்டு தொழுவம்

திருவொற்றியூரில் அமைகிறது மாநகராட்சி மாட்டு தொழுவம்

திருவொற்றியூர் ருவில் சுற்றித்திரியும் மாடுகளை பராமரிக்க, திருவொற்றியூரில் மாநகராட்சி சார்பில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 300க்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. பல இடங்களில் மாட்டின் உரிமையாளர்கள், தொழுவம் அமைத்து பராமரித்து வருகின்றனர். ஆனால், ஒன்றிரண்டு மாடுகள் வைத்திருப்பவர்கள், பராமரிக்க இடமின்றி சாலையோரம் கட்டி வைத்து வளர்க்க வேண்டிய சூழல் உள்ளது. சில நேரங்களில், மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பாத மாடுகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், தெருவில் சுற்றித்திரிகின்றன. இதற்கு தீர்வாக, திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில், மாட்டு கொட்டகை அமைக்கும் பணியில் மாநகராட்சி களமிறங்கியுள்ளது.அதன்படி, 40 மாடுகள் கட்டி பராமரிக்கும் அளவிற்கு, கொட்டகை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தீவன கிடங்கு, தண்ணீர் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.மாடுகளை தொழுவத்தில் பராமரிக்க முடியாத ஒன்றிரண்டு மாடு வைத்திருப்பவர்கள் மற்றும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், நாளொன்றுக்கு, 10 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் என தெரிகிறது. மண்டலத்தில் மூன்று இடங்களில், இது போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, மாநகராட்சி உயரதிகாரிகளுடன் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என, திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் விஜயபாபு ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ