பைக் - கார் மோதல் தம்பதி படுகாயம்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி - வெங்கடம்மாள் தம்பதி. இவர்கள், சுருட்டப்பள்ளியில் நடந்த திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அம்பேத்கர் நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.