உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரத்தில் கொட்டப்பட்ட மாட்டுச்சாணம்  வாகன ஓட்டிகள் அச்சம் படம் மட்டும்

சாலையோரத்தில் கொட்டப்பட்ட மாட்டுச்சாணம்  வாகன ஓட்டிகள் அச்சம் படம் மட்டும்

திருவாலங்காடு:திருவாலங்காடு -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பெரிய களக்காட்டூர் கிராமம். இந்த பகுதிவாசிகள், 1500க்கும் மேற்பட்ட பசு, எருது உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.சிலர் தொழுவத்தில் சேகரமாகும் மாட்டுச்சாணங்களை நெடுஞ்சாலையோரம் கொட்டி, மலைபோல் குவித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த மாட்டுச்சாணம் கரைந்து சாலையில் கழிவு நீர் போல் ஓடுகிறது. இதனால், அந்த பகுதி வழியே வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோன்று சாலையில் ஓடும் மாட்டுச்சாணத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையோரம் மாட்டுச்சாணம் கொட்டுவதை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, நெடுஞ்சாலையோரம் மாட்டுச்சாணம் கொட்டப்படுவதை தடுக்கவும், அகற்றவும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை