மேலும் செய்திகள்
தி.மு.க., 'மாஜி' உட்பட ஏழு பேருக்கு 'ஆயுள்'
27-Feb-2026
திருவள்ளூர்: கீழ்நல்லாத்துார் பகுதியில் பசு மாட்டை திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துாரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 55; விவசாயி. இவர், ஐந்து பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணியளவில் மாடுகள் சத்தம் போட்டுள்ளன. கமலக்கண்ணன் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கம் கட்டியிருந்த ஒரு பாசு மாட்டை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர், 'ஸ்கார்பியோ' காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்தோர் உதவியுடன் கமலக்கண்ணன் மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது, ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பியோடினர். இதுகுறித்த புகாரின்படி, வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், திருநின்றவூர் அடுத்த பாலவேடைச் சேர்ந்த சாரதி, 19, என்பவரை கைது செய்தனர். மேலும், கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய வினோத், சந்தோஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
27-Feb-2026