உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ. 378 கோடி இழப்பீடு

பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ. 378 கோடி இழப்பீடு

திருவள்ளூர்:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் 1.76 லட்சம் விவசாயிகளுக்கு, 378 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2016--- 17 முதல் 2023-- 24 வரை 378.08 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு தொகை, 1,76,273 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023-- 24ம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கு 12,787 விவசாயிகளுக்கு 14.72 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், ராபி பருவத்தில், 140 விவசாயிகளுக்கு 0.27 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் தவறான வங்கி கணக்குகளை பதிவேற்றம் செய்ததால் வழங்கப்படாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கை வாயிலாக, 7,776 விவசாயிகளுக்கு 14.68 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.நடப்பு, 2024-- 25ல் காரீப் பயிர்களுக்கு 1,020 விவசாயிகள் 3,292 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். சம்பா நெற்பயிருக்கு இதுவரை 19,050 விவசாயிகள் 52,886 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி